யாழ்தேவியை இடைநடுவில் நிறுத்திவிட்டுச் சென்ற சாரதியால் சர்ச்சை

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த யாழ்தேவி ரயில் அனுராதபுர ரயில் நிலையத்தில் சாரதியால் நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த ரயிலை அனுராதபுர ரயில் நிலையத்தில் நிறுத்திவிட்டு சாரதி இறங்கிச் சென்றுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.

ரயில்வே சாரதிகளின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக வடக்கு ரயில் சேவைகள் அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இதன் காரணமாகவே ரயில் சாரதி ரயிலை அநுராதபுர ரயில் நிலையத்தில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

பயணிகளிடம் யாழ்ப்பாணம் வரைச் செல்வதற்கான கட்டணம் அறிவிடப்பட்டு திடீரென ரயிலை இடைநடுவில் நிறுத்தியுள்ளதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.