வெளிநாடு சென்ற தமிழர்களை திருப்பி அழைக்க ரணில் வகுக்கும் வியூகம்!

யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தை தரமுயர்த்துவதன் மூலம் அங்கிருந்து மேற்கு நாடுகளுக்குச் சென்றோரை மீண்டும் வரவழைக்க முடியுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை தெரிவித்தார்.

யுத்தத்தினால் சீர்குலைக்கப்பட்ட பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் இம்முறை கடந்த வருடத்திலும் பார்க்க இரண்டு மடங்கு நிதி யாழ்ப்பாணத்திற்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய பிரதமர் விக்கிரமசிங்க இப்பணிக்கு வலுசேர்க்கும் வகையில் மேற்குலகில் வசிக்கும் தமிழ் டயஸ்போராக்கள் யாழ்ப்பாணத்துக்கு நிதியுதவி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

உள்நாட்டு யுத்தத்தை காரணமாக வைத்து தமிழர்களும் சிறந்த வாழ்க்கை முறையை எதிர்பார்த்து அனைத்து இனங்களைச் சேர்ந்தவர்களும் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்தனர். நாட்டின் பொருளாதாரம் பலப்படுத்தப்படுமாயின் இவர்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்பி வருவதில் எவ்வித ஐயமும் இல்லை. யுத்தத்திற்கு அஞ்சி நாட்டை விட்டுச் சென்றவர்களை மீண்டும் அழைக்கும் அடிப்படையில் அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 2009 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட பிரேரணையில் சிபாரிசு செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் வெ ளிவிவகார அமைச்சர் மற்றும் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அதேநேரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தேசிய நல்லிணக்கச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.