பலவகையான மருத்துவ குணங்கள் கொண்ட எலுமிச்சை டீயில், பூண்டு சேர்த்து தினமும் குடித்து வந்தால் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.
இதில் விட்டமின் A, B, C, E, J போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.
இந்த டீ யை போன்று பால் சேர்க்காமல் தயாரிக்கப்படும், ப்ளாக் டீ, க்ரீன் டீ, செம்பருத்தி டீ மற்றும் லெமன் டீ வகைகளும் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
தேவையான பொருட்கள்
- பூண்டு பல் – 1
- எலுமிச்சை – 1
- சூடான தண்ணீர் – 1 கப்
செய்முறை
எலுமிச்சை பழத்தை கழுவி, ஸ்லைஸ் போன்று நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் தோல் உரித்த பூண்டு மற்றும் எலுமிச்சை ஆகிய இரண்டையும் ஒரு கப் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
இதை ஏழு நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் இந்த எலுமிச்சை டீயை தினமும் காலையில் குடித்து வந்தால், நல்ல பலன்கள் கிடைக்கும்.
நன்மைகள்
எலுமிச்சை பழத்துடன் பூண்டு சேர்த்த டீயை குடிப்பதால் காய்ச்சல், சளித் தொல்லை, அதிக கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
குறிப்பு
உடல்நலக் குறைபாடு இருக்கும் போது நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை இதை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மேலும் காய்ச்சல் வருவது போன்ற அறிகுறி இருந்தால், மூன்று நான்கு நாட்கள் தொடர்ந்து குடித்து வர வேண்டும்.