அந்த பையனுக்கும் இதற்கும் சம்மந்தமே இல்லை- விஜய்யை புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து நடிகர்களும் விரும்புவது நம்பர் 1 இடத்தை தான். அதை யாருக்கும் விட்டு தராமல் இன்றும் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

மலரும் நினைவுகளாக சாமி வெற்றிவிழாவில் ரஜினிகாந்த் விஜய் குறித்து பேசியதை பார்ப்போம், இதில் ‘விஜய்யை எப்போதும் நான் பிரம்மிப்புடன் பார்க்கிறேன்.

அத்தனை அமைதியான இவர் ஸ்கிரீனில் ஆக்‌ஷன் பறக்க அடி தூள் கிளப்புகிறார், இந்த பையனுக்கும், இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று நினைக்க வைத்துவிடுவார்.

கடைசியாக பார்த்த வசீகரா கூட எனக்கு மிகவும் பிடித்தது’ என புகழ்ந்து தள்ளியுள்ளார்.