உலகின் வயதான விண்வெளி வீராங்கனை! யார் என்று தெரியுமா?

விண்வெளியை அடைந்த உலகின் மிக வயதான விண்வெளி வீராங்கனை என்ற பெருமையை பெக்கி விட்சன் பெற இருக்கின்றார்.

அமெரிக்காவைச் சேர்ந்த 56 வயதான பெக்கி விட்சன் என்பவர் விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாளை (18) பயணிக்கவுள்ளார்.

இதன்மூலம் விண்வெளியை அடைந்த உலகின் மிக வயதான விண்வெளி வீராங்கனை என்ற பெறுமையை பெறப்போகின்றார்.

நாசா விண்வெளி மையத்தில் பணிபுரியும் பெக்கி விட்சனின் மூன்றாவது விண்வெளிப் பயணம் இதுவாகும்.

Expedition 50-51 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பயணமானது ரஷ்யாவில் அமைந்துள்ள பைக்கானூர் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து நாளை ஆரம்பமாகிறது.

 

பெக்கி விட்சனுடன் ரஷ்யாவின் ஒலெக் நேவிட்ஸ்கி மற்றும் ஐரோப்பிய விண்வெளி மையத்தைச் சேர்ந்த தாமஸ் பெஸ்க்யூட் ஆகிய இருவரும் பயணிக்கவுள்ளனர்.

இதற்கு முன்னதாக 2007ஆம் ஆண்டில், அமெரிக்காவின் பார்பரா மோர்கன் என்ற வீராங்கனை தனது 55ஆம் வயதில் விண்வெளிக்கு பறந்ததே சாதனையாக இருந்து வந்தது.

நாளை பயணிக்கவுள்ள பெக்கி விட்சன் 56 வயதைக் கடந்துள்ளதால், பார்பரா மோர்கனின் சாதனை முறியடிக்கப்படுகிறது.