அடடே.. வாழைப்பழ தோல் போதுமே! ஜொலி ஜொலிக்கும் அழகுக்கு!

அழகாக இருப்பது யாருக்குத் தான் பிடிக்காது, இதற்காக கடைகளில் விற்கும் கண்ட கண்ட க்ரீம்களை வாங்கி பயன்படுத்துவோம்.

பயன்படுத்த தொடங்கியதுமே நல்ல ரிசல்ட்டை தந்தாலும், பின்னாளில் பல்வேறு சரும பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

இதற்கு பதிலாக இயற்கையாக வீட்டிலிருக்கும் பொருட்களை கொண்டே பருக்களை போக்கலாம், இதற்கான தீர்வு தான் வாழைப்பழ தோல்.

வாழைப் பழத்தின் தோலை பயன்படுத்துவது எப்படி?
  • முகப்பருக்கள் அதிகமாக உள்ளவர்கள் தங்களின் முகத்தை முதலில் பேஸ்வாஷ் போட்டு, நன்றாக கழுவ வேண்டும். பின்பு வாழைப்பழத்தின் தோலை முகத்தில் வைத்து மென்மையாக தேய்த்தால், முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி பளிச்சென்று இருக்கும்.
  • பழுத்த வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு 15 நிமிடம் வரை நன்றாக மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் உங்களின் முகத்தின் கருமை நிறம் மாறுவதுடன் கரும்புள்ளிகளும் நீங்கும்.
  • வாழைப்பழத்தின் தோலில் விட்டமின் A, B, C, E, ஜிங்க், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளது. இந்த சத்துக்களை நமது சருமம் உறிஞ்சி கொண்டு, முகத்தை பொலிவாக மாற்றுகிறது.