யாழ்ப்பாணம் குருநகரைச்சேர்ந்த இதராஜ் என்பவரின் மீன்பிடி வலையில் நேற்று 16.11.2016 புதன் கிழமை, 1500 கிலோவுக்கும் அதிகமான சீலாவின் தம்பி ஊசிசீலா வகை மீன்கள் அகப்பட்டுள்ளன.
ஒரேதடவையில் இப்படி பெருந்தொகையான மீன்வளத்தை அள்ளிக்கொடுத்த கடல் அன்னைக்கு இதராஜ் படகு அணியினர் நன்றி கூறுவதுடன் இது அதிஸ்டமானது என்றும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடல் வளத்தைச் சுரண்டிக்கொண்டோடும் இந்திய இழுவைப்படகுகளின் வரத்துகள் முற்றாக நிறுத்தப்பட்டால் எமது கடல் எமக்கே என்ற மனநிறைவோடு தொழிலில் ஈடுபட்டு எமது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும் என்பதற்கு இது சாட்சி.