மோடி என் மகனே இல்ல… கண்ணீர் விட்ட தாயின் அதிர்ச்சி பேட்டி!

உலக நாடுகள் பலவும் மோடியின் இந்த தைரியமான முடிவை பார்த்து ஆச்சரியப்படுகின்றன. பொதுமக்களும் தங்களிடம் இருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மற்றி வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் தன்னிடம் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிக்கு நேரடியாக சென்றார். வயதான அவர் வங்கிக்கு சென்று மாற்றியது ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.

இதனையடுத்து நேற்று சில பத்திரிக்கைகள் மோடியின் தாயை பேட்டி எடுத்தனர். அப்போது பேசிய அவர், மோடி எனக்கு மகனே இல்லை, எனக்கென்று யாரும் கிடையாது. மோடி என்வயிற்றில் பிறந்தாலும் அவன் பாரத மாதாவின் பிள்ளையாகி பல வருடங்கள் ஆகிவிட்டது.

மோடி எனக்கு மகன் இல்லை அவன் இந்த தேசத்தின் மகன் அவனை நான் இந்த தேசத்திற்கு தத்து கொடுத்துவிட்டேன் என்று கூறி ஆனந்தக் கண்ணீர் விட்டார்.