எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தி, அனைத்து துறைகளையும் முன்னேற்றி, மக்களுக்கு மகிழ்ச்சியான வாழ்வினை அமைத்துக் கொடுக்க தயாராகி வருவதாக அமை ச்சர் சாகல ரத்நாயக்க இன்று பாராளுமன்றில் தெரிவித்துள்ளனர்.
மக்கள் ஜனநாயக ரீதியில் யாருக்கு வாக்குகளை அளித்திருந்தாலும் அனைவரும் நாட்டின் பிரஜைகளே அவர்கள் அனைவருக்கும் சேவை செய்வது எமது அரசின் கடமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அபிவிருத்தி என்பது மிக முக்கியமானதாகும் அனைவரையும் முன்னேற்றும் வகையில் அதனை நடைமுறைப்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும்.
அவ்வகையில் நாட்டின் எதிர்கால நன்மை கருதி மிக சிறப்பாக திட்டமிடப்பட்டே இம் முறை வரவு செலவு திட்டத்தை தயாரித்தோம்.
முன்னைய அரசோ அவசியமற்ற திட்டங்களுக்காக கடன்களை பெற்று மக்கள் தலையில் சுமத்தியது.
இவை அனைத்தையும் நிவர்த்தி செய்யவும் நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்லவுமே தற்போது வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது என்றார்.