அண்மையில் நியூசிலாந்தில் 7.8 டிக்டர் அளவிலான பாரிய பூமியதிர்வுகள் அடுத்தடுத்து ஏற்பட்டமையால் சுனாமி பேரலைகள் உருவாகி இருந்தன.
நில அதிர்வின் இரண்டு மணித்தியாலங்களுக்கு பின்னர், நியூசிலாந்து கடற்கரையோரங்களில் சுனாமி அலைகள் ஏற்பட்டதுடன், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நில அதிர்வின் பின்னர் மேலும் பல அசாதாரண சம்பவங்கள் கடற்கரையோரங்களில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான காட்சிகள் அடங்கிய காணொளிகளை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
நியூசிலாந்தின் கைகொவுரா கடற்கரையில் சீபெட் எனப்படும் கடலுக்கு கீழ்லுள்ள நிலப்பரப்பு, சுனாமி தாக்கம் காரணமாக மேலெழுந்துள்ளது.
இதற்கு முன்னர் ஏற்பட்ட பல நிலஅதிர்வின் போது இவ்வாறான சம்பவங்கள் எதுவும் பதிவாகி இருக்கவில்லை என துறைசார் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான தாக்கங்கள் ஆபத்தை ஏற்படுத்துமா என்பது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, நியூசிலாந்தில் நில அதிர்வுகள் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் மர்ம வெளிச்சங்கள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.