அரசாங்கத்தின் எதிர்கால பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் கோரியுள்ளார்.
நாடாளுமன்றில் வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் நேற்று பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
போரை முடிவுக்குக் கொண்டு வந்து வரலாற்றில் இடம்பிடித்துள்ள மஹிந்த ராஜபக்ஸ நாட்டை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்த உதவி செய்ய வேண்டும்.
எமக்கு உதவி வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்து பேச்சுவார்த்தை நடத்த முடிந்துள்ளதாக ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் முடிந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதியும் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கோருகின்றேன்.
இந்த சந்தர்ப்பத்தை மஹிந்த ராஜபக்ஸ உதாசீனம் செய்யக் கூடாது. நாட்டை அபிவிருத்தி செய்ய அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.