ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்தது ஏன்? அபிஷேக்கின் சுவாரசிய பதில்

ஐஸ்வர்யா என்ன தான் உலகி அழகியாக இருந்தாலும் பாலிவுட், கோலிவுட், ஹாலிவுட் என பல்வேறு திரைத்துறையில் பயணம் செய்தாலும் தனது குடும்பம் என்று வருகிறது போது அதற்கே முன்னுரிமை கொடுப்பவர்.

தனது குழந்தை ஆரத்யா மற்றும் காதல் கணவன் அபிஷேக் பச்சனுடன் இல்லற வாழ்க்கையை நல்லறமாக நடத்தி வந்தாலும், இவரை பற்றிய கிசுகிசுக்களுக்கு எப்போதும் பஞ்சம் இருக்காது.

அதுவும் இவரை பற்றிய கிசுகிசுக்கள் அதிகமாக வருவது காதல் காட்சிகளில் தான். மீடியாக்கள் இவர்கள் உறவை பற்றி பல்வேறு கோணங்களில் யூகித்தாலும், நாங்கள் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் எங்களுக்கு தெரியும் என்று பதில் கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவார்கள்.

இந்திய தாம்பத்ய வாழ்வியல் கலாசாரப்படி திருமணத் தம்பதிகளில் பெண்ணிற்கு வயது குறைவாகவும், ஆணிற்கு அதிகமாகவும் இருக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்து வந்தது.

ஆனால், காதலுக்கு வயது ஒரு தடை இல்லை, இருவரது மனமும் ஒத்துப்போனாலே ஒரு யுகம் இந்த பூமியில் சந்தோஷமாக வாழ்ந்து விடலாம் என்பதை நிரூபித்துள்ளார்கள் இந்த ஜோடி.

நடிகை ஐஸ்வர்யா ராய் உலக அழகி என்ற காரணத்தினாலேயே அவரை சுற்றி ஆண்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் இந்த காரணத்தால் அவரை நான் திருமணம் செய்துகொள்ளவில்லை, மாறாக அவர் மீது உள்ள காதலால் அவரை திருமணம் செய்துகொண்டேன் என கூறியுள்ளார்.

பாலிவுட் உலகில் கொடிகட்டி பறந்த ஐஸ்வர்யா ராய்க்கு, சல்மானுடன் ஏற்பட்ட காதல் முறிவு பெரும் சோகத்தை அளித்தது. இதில் துவண்டு போயிருந்த ஐஸ்வர்யாவுக்கு அப்போதுதான் அபிஷேக்கின் கண்ணியமான நட்பு கிடைத்தது.

இருவரும் இணைந்து சினிமாவில் காதலர்களாக நடித்தனர். இதன் மூலம் இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது.

அபிஷேக்கின் கவுரவமான காதலை ஐஸ்வர்யா ஏற்றுக் கொண்டார், இருவரும் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

இரு குடும்பமும் முறைப்படி பேசி கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணத்தை முடித்து வைத்தனர். ஐஸ்வர்யா, அபிஷேக்கை விட மூன்று வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நிகழ்ச்சியின் போது அபிஷேக் தனது காதல் மனைவி பற்றி கூறியிருந்தார்.

என்னை பொறுத்தவரை ஐஸ்வர்யா ராய் தான் இந்த பூமியில் மிகவும் அழகான பெண். நான் தினமும் என் முகத்தை பார்த்த கண்ணாடியில் பார்க்கும்போது ஒருவித அச்ச உணர்வு ஏற்படும்.

காரணம் என் முகம் மிகவும் கொடூரமாக இருக்கும். எனவே நான் அவருடன் போட்டியிட விரும்பவில்லை, அது என்னால் முடியாத விஷயமும் கூட.

நாங்கள் இருவரும் அழகினால் இணைந்தவர்கள் கிடையாது, ஐஸ்வர்யா ராய் மிகவும் அழகான பெண், சாதாரண மக்கள் அவரை பார்ப்பது அரிது.

நான் ஒரு நடிகர் என்பதாலோ, அல்லது மிக பெரிய நடிகரின் மகன் என்பதாலோ அவர் என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை. நானும், அவர் ஒரு உலக அழகி என்பதால் அவரை திருமணம் செய்துகொள்ளவில்லை.

மாறாக, நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட காதலால் திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளோம் என கூறியுள்ளார்.