கல்கமுவை – மொரகொல்ல – கல்வங்குவ பிரதேசத்தில் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் சிற்றூந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிற்றூந்தில் பயணித்த 4 பேர் காயமடைந்துள்ளதுடன், சிற்றூந்தின் சாரதியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
20 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.