மோடியின் உயிருக்கு ஆபத்தா? ஏன் ? எதற்காக?

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அறிவித்தார். இதனையடுத்து புதிய 2000 ரூபாய் நோட்டுகளை பெற மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனையடுத்து நிகச்சி ஒன்றில் பேசிய மோடி கருப்பு பணம் வைத்திருப்பவர்களால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என கண்ணீர் மல்க பேசினார். மோடியின் இந்த பேச்சை பலரும் விமர்சித்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது முதல் ஏழை, எளிய மக்கள் சொல்லொணாத் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர்.

மோடி அரசின் சர்வாதிகார அறிவிப்பால் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். தனது சொந்த பணத்தை எடுக்க முடியாமல் பொதுமக்கள் அல்லல்படுகின்றனர்.

பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தன் உயிருக்கு ஆபத்து என மோடி நாடகமாடுகிறார்.

தனது சொந்த பணத்தை எடுப்பதற்காக வங்கிகளுக்கு செல்பவர்களுக்கு கை விரலில் மை வைக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

இதை வன்மையாக கண்டிக்கிறோம். பொதுமக்களுக்கு எதிரான இந்த அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

வழக்கம் போல 500, 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். பொதுமக்களை இன்னலுக்கு ஆளாக்கிய ரிசர்வ் வங்கி கவர்னர் இதற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (18-ந் தேதி) காலை 10 மணிக்கு சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் தனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.