ஜெயலலிதா ஏன் இன்னும் ஐசியூ-வில் இருக்கிறார். பிரதாப் ரெட்டி விளக்கம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் உடல்நலக்கோளாறு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது இரண்டு மாதங்கள் அவர் சிகிச்சை எடுத்து கொண்ட நிலையில் இன்னும் அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதால் அவர் எப்போது நார்மல் வார்டுக்கு மாற்றப்படுவார் என்பது குறித்து இணையதளங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து அப்பல்லோ தலைவர் விளக்கமளித்துள்ளார். முதல்வருக்கு மீண்டும் தொற்று ஏற்படாமல் இருப்பதை தடுக்கவே அவசர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும், அவருக்கு நுரையீரல் சீராக செயல்பட டிரக்கிஸ்யோடோமி பொருத்தப்பட்டுள்ளதாகவும், டிஸ்சார்ஜ் நாள் குறித்து முதல்வரே முடிவு செய்வார் என்றும் கூறியுள்ளார்.