ஆபி­ரிக்க வம்­சா­வ­­ளியினர் இலங்கையில்

புத்­தளம், காலி, அம்­பாந்­தோட்டை ஆகிய மாவட்­டங்­களில் ஆபி­ரிக்க வம்­சா­வ­ளியைச் ­சேர்ந்­ த­வர்கள் வாழ்ந்து வரு­வ­தாக உள்­நாட்­ட­லு­வல்கள் பிர­தி­ய­மைச்சர் நிமல் லான்ஸா தெரி­வித்­துள்ளார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை வாய்மூல விடைக்­கான கேள்வி நேரத்தின் போது ஐக்­கிய தேசியக் கட்­சியின் மாத்­தறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் புத்­திக பத்தி­ரண எழுப்­பிய கேள்­விக்குப் பதி­ல­ளித்­த­போதே பிர­தி­ய­மைச்சர் நிமல் லான்ஸா மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் புத்­திக பத்­தி­ரண, புத்­தளம் மாவட்­டத்தில் சிரம்­பிட்­டிய பிர­தே­சத்தில் ஆபி­ரிக்க வம்­சா­வ­ளியைச் சேர்ந்த ஆட்கள் வசிக்­கின்ற கிராம சேவகர் பிரி­வுகள் யாவை? தற்­போது அந்தப் பிர­தே­சங்­களில் வசிப்­ப­வர்­களின் எண்­ணிக்கை எவ்­வ­ளவு? மேற்­படி ஆட்கள் இல­ங்­கையின் வேறு எந்தப் பிர­தே­சங்­க­ளி­லா­வது வசிப்­ப­தாக அறி­ய­வந்­துள்­ளதா? இவர்­க­ளுக்­கான உரிமை அரசால் உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ளதா? அந்த மக்­களின் கலா­சார தனித்­து­வங்கள் மற்றும் பாரம்­ப­ரிய மர­பு­ரி­மை­களை பேணி வாழ்­வ­தற்­காக அர­சாங்கம் அனு­ச­ரணை வழங்­கி­யுள்­ளதா எனக்­கேள்­வி­களை எழுப்­பினார்.

அதற்­கு­ ப­தி­ல­ளித்த பிர­தி­ய­மைச்சர் நிமல் லான்ஸா, புத்­தளம் சேனைக்­கு­டி­யி­ருப்பு, பாலாவி கிரா­ம­சே­வகர் பிரி­வு­களில் ஆபி­ரிக்க வம்­சா­வ­ளியைச் சேர்ந்த 35 குடும்­பங்­களைச் சேர்ந்த 113 பேர் வசிக்­கின்­றனர்.

காலி, அம்­பாந்­தோட்டை மாவட்­டங்­க­ளிலும் சிறிய தொகை­யினர் வாழ்ந்து வரு­கின்­றனர். இவர்­க­ளுக்கு இலங்கை பிர­ஜை­யொ­ரு­வ­ருக்கு உள்ள அனைத்து சலு­கை­களும் எமது அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­பட்­டுள்­ளன. இவர்­களின் கலை, கலா­சா­ரங்கள் பேணப்­ப­டு­வ­தற்கு சுதந்திரமளிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக கூறுவதாயின் இசைக்குழுக்களை வைத்து, இசை நிகழ்ச்சிகளைக்கூட இவர்கள் நடத்துகின்றனர். அரசாங்கம் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றது என்றார்.