யாழில் தோண்ட தோண்ட பணம்…!

மாதகல் கோணாவளை பகுதியில் உள்ள வீடு ஒன்றின் அறையில், கிடங்கு வெட்டி மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 கிலோ 305 கிராம் கஞ்சா மற்றும் 76 இலட்சத்து 2 ஆயிரத்து 500 ரூபாய் பணம் என்பவற்றை கைப்பற்றியுள்ளதாக இளவாலை பொலிஸ் நிலைய தற்காலிக பொறுப்பதிகாரி டிக்கிரி பண்டாரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வீட்டு உரிமையாளரான 24 வயதுடைய யுவதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இளவாலை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு நேற்று (16) மதியம் கிடைக்கபெற்ற இரகசியத் தகவலினை அடுத்து குறித்த வீடுசுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

வீட்டின் அறையினுள் சந்தேகத்துக்கிடமான முறையில் இருந்த குழியொன்றை தோண்டிய போது, 5 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா மீட்கப்பட்டது.

மேலும், வாளி ஒன்றினுள் மிகவும் சூட்சுமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5,000 மற்றும் 500 ரூபாய் தாள்களை கொண்ட 76 இலட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுவேளை, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.