இன்று தனது 32வது பிறந்த நாளை கொண்டாடும் நயன்தாரா தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் அவர் நடிக்கவுள்ள புதிய பட அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது.
கமல் நடித்த உன்னைபோல் ஒருவன், அஜித் நடித்த பில்லா 2 ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சக்ரி டோலட்டி இயக்கும் படத்தின் முக்கிய கேரக்டரில் நயன்தாரா நடிக்கவுள்ளார். இந்த படத்தின் மூலம் யுவன்ஷங்கர் ராஜா தயாரிப்பாளர் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யுவன்ஷங்கர் ராஜா இசையில், பாபி ஒளிப்பதிவில் உருவாகவுள்ள இந்த படம் ஒரு திகில் படம் என்பது இதன் ஃபர்ஸ்ட்லுக்கில் இருந்து தெரியவருகிறது.