முன்னாள் மன்னனுக்கு இப்படி ஒரு செல்வாக்கா…!! மஹிந்த பெயரை சொன்னதுமே அதிர்ந்த பாராளுமன்றம்

இன்று பாராளுமன்றத்தில், வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதன் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வருகைத் தந்திருக்க வில்லை.

எனினும் குறித்த வாக்களிப்பு கணக்கெடுப்பு நடந்த போது, மஹிந்தவின் செல்வாக்கு நிரூபிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் வாய் மூலமான வாக்கெடுப்பு நடைபெற்ற போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பெயர் அழைக்கப்பட்டது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகளவாக ஒருமித்து மஹிந்த பெயரை உச்சரித்து கூக்குரல் எழுப்பினர். மேசையின் மீது தட்டியும் தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர். இதனால் வாக்கெடுப்புக்காக அமைதியாக இருந்த பாராளுமன்றம் சிறிது அமைதியிழந்து அதிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவும் இன்று பாராளுமன்றம் வருகைத் தரவில்லை ஆனாலும் அவர் பெயரைக் கூறியபோதும் பாராளுமன்றத்தில் கூச்சல் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று பிறந்தநாள் கொண்டாடிய மஹிந்தவிற்கு மகிழ்ச்சியானதொரு செய்தியாக அமைந்திருக்கும் என கூறப்படுகின்றது.