இன்று உலகத்தின் கதாநாயகன் பிரதமர் மோடி.கருப்பு பணத்தை ஒழிப்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார். அதற்காக எத்தகைய இழப்பையும் சந்திக்க தயாராக இருக்கிறார்.
உலகமெங்கும் பாராட்டுகள் குவியும் போதிலும்,நாட்டிற்குள் ஆதரவும்,எதிர்ப்பும் இருக்கிறது. தொலை நோக்குப்பார்வையில் மோடி அறிவித்திருப்பது நாட்டிற்கு நன்மை தரும் என்றாலும் கூட சில அரசியல் கட்சிகள் மக்கள் மத்தியில் தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர்.
முன்பு ஒரு முறை பிரதமர் மனைவி பற்றி மீடியாக்கள் கேட்ட போது எனக்கு இந்திய மக்களைத் தவிர வேறு உறவுகள் கிடையாது என்று கூறி இருந்தார். ஆனால், மனைவியின் பெயர் ஜசோதாபென் என்று பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவயதில் விருப்பமின்றி, கட்டாயப்படுத்தி நடத்தப்பட்ட திருமணத்தால், மனைவியைவிட்டு மோடி பிரிந்ததாக அவரது சகோதரர் சோம்பாய் மோடி கூறியுள்ளார். பா.ஜ. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, திருமணம் ஆகாத பிரம்மசாரி என்றுதான் எல்லோருமே கருதி வந்தனர்.
பல்வேறு பொதுக் கூட்டங்களில் மோடி பேசுகையில் கூட, ‘‘எனக்கு குடும்பம் இல்லை. நான் தனிக்கட்டை. அதனால் ஊழல் செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து என்ன செய்ய போகிறேன்’ என்று குறிப்பிட்டார்.
அப்போது ஜசோதா பெண்ணிடம் மீடியாக்கள் கேட்டன. உங்கள் கணவர் பற்றி ஏதாவது கூறுங்கள் என்றபோது… கொஞ்ச நேரம் யோசித்தவர்..
அவர் எனக்கு கணவரே இல்லை. கல்யாணம் ஆன அன்றே கூறி விட்டார். உனக்கு நான் முழுமையான கணவராக ஒரு போதும் இருக்க மாட்டேன். எனக்கு நிறைய கனவுகள் உண்டு. ஒரு புருஷனா வாழ்ந்து செத்துப் போக மாட்டேன். இது எனது மண். இங்கு நிறைய பிரச்சனைகள் இருக்கிறது.
எனக்கென்று ஒரு இயக்கம் இருக்கிறது. நான் முதலில் இந்தியாவின் மகன். குஜராத் எனது அன்னை பூமி. அதற்கு நான் பிள்ளை. புரிந்து கொள்ள உன்னால் முடியுமா என்று தெரியவில்லை. அப்படி புரிய வில்லை என்றால் என்னோடு உன்னால் வாழவே முடியாது என்று கூறினார். அப்போதே எனக்கு தெரிந்து விட்டது.
இவர் இந்த தேசத்தின் சொத்து. எனது சொத்தல்ல என்று.. இவ்வாறு அப்போதே கூறினார்.. இப்போது உலக நாயகனாக மோடி திகழ்வதைப் பார்க்கும் போது அன்று அவர் சொன்னது நிஜம் என்று தெரிகிறது..!