தாம் சுகபோகமாக வாழ்வதற்கு ஏதும் அறியாத சிறுவர்களை சில ஆசாமிகள் பயன்படுத்தி வருவது உண்டு. உதாரணமாக சிறுவர்களைக் கொண்டு பிச்சை எடுப்பது, அவர்களை வேலைக்கு அமர்த்துவது என்று பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம்.
தமது சொற்படி கேட்பார்கள் அல்லது அதட்டி வேலை வாங்கலாம் என்பதுடன் குறைந்த சம்பளமும் வழங்கலாம் என்பதனாலேயே இவ்வாறு பயன்படுத்தப்படுகின்றார்கள். இதற்காக பல சிறுவர்கள் கடத்தப்பட்டும் வருகின்றார்கள்.
இதேபோன்று கடை ஒன்றில் நபர் ஒருவர் ஸ்மார்ட் கைப்பேசியினை திருடுவதற்கு சிறுவன் ஒருவரை பயன்படுத்தியுள்ளார். இவர்தான் இந்த சிறுவனின் தந்தையா?.. என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனினும் சிசிடிவி கமெராவின் உதவியுடன் குறித்த திருட்டு கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளது. திருட்டுக்கு சிறுவனை பயன்படுத்திய சம்பவம் தற்போது பலத்த கண்டனங்களுக்கு உள்ளாகி வருகின்றது.