பிரான்சில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதி ஒருவனின் பெயரை இனி குழந்தைகளுக்கு சூட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் இந்த மாத துவக்கத்தில் பிறந்த குழந்தை ஒன்றிற்கு அதன் பெற்றோர்கள் Mohamed Merah என்ற பெயரை சூட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த பெயர் கொண்ட தீவிரவாதி கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் Toulouse நகரில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 7 பேரை கொன்று குவித்துள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த நபர் அல் கொய்தா ஆதரவாளர் என்று தம்மை அறிமுகப்படுத்தி வந்துள்ளதாகவும் சம்பவத்தின் போது 3 ராணுவ வீரர்களையும் 3 யூத பாடசாலை மாணாக்கர்களையும் ஒரு மத புரோகிதரையும் சுட்டு வீழ்த்தியுள்ளார்.
குறித்த சம்பவத்திற்கு பின்னர் அந்த பெயரை பயங்கரவாதிகள் பட்டியலில் மட்டுமின்றி தடை செய்யப்பட்ட பெயர்கள் வரிசையிலும் வைக்கப்பட்டிருந்தது.
தற்போது பிரான்சில் ஒரு குழந்தைக்கு அந்த பெயரை சூட்டியிருப்பது எதிர்காலத்தில் குழந்தைக்கு சிக்கல்களை வரவழைக்க வாய்ப்பு இருப்பதாக கருதுவதால், குறித்த பெயரை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட பெற்றோருக்கு அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
குறித்த பயங்கரவாதியின் பெயரை வேண்டுமென்றே குழந்தைக்கு சூட்டினாரா என்பது குறித்து தெளிவான தகவல்கள் ஏதும் இதுவரை இல்லை என்று தெரிவித்துள்ள அதிகாரிகள்,
பயங்கரவாதியின் பெயரை குழந்தைக்கு சூட்டிய பெற்றோரின் நோக்கம் குறித்து அறிந்துகொள்ள உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் சட்ட திட்டங்களின்படி எந்த பெயரை வேண்டுமானாலும் குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் சூட்டிக் கொள்ளலாம். ஆனால் பெயரில் இருக்கும் வேறுபாட்டை பொருத்தே பதிவாளரோ அதிகாரிகளோ தலையிடுவார்கள்.