மக்களை குறிவைத்து தாக்குவதில் பல்வேறு நோய்கள் இருந்தாலும், உடல் பருமன் என்பதுதான் தற்போது தலையாய பிரச்சனையாக இருக்கிறது.
உடல் பருமனாக இருந்தாலும் பராவயில்லை, அது நீரிழிவு, மாரடைப்பு என பல்வேறு நோய்கள் ஏற்பட காரணமாக இருக்கிறது.
உடல் எடையை குறைப்பதற்காக மருத்துவர்களிடம் சென்றால், துரித உணவுகள், எண்ணெய் உணவுகளை தவித்து அதிக காய்கறிகளை சாப்பிடுங்கள் என்று கூறுவார்கள்.
டயட்டுக்கு அடுத்தபடியாக உடலில் உள்ள கொழுப்புளை நீக்குவதுதான் லிபோசக்ஷன் சிகிச்சை .
இந்த சிகிச்சை ஆபத்தானதும் கூட. ஆனால் சிலருக்கு உடல் எடையை குறைக்க உதவுகிறது.
சிகிச்சை எடுக்க வரும் நபரின் உடல்நிலை தகுதியான பின்தான் அறுவை சிகிச்சையை செய்ய வேண்டும். இந்த அறுவை சிகிச்சையானது ஒரு சென்டிமீட்டர் அளவில் துளையிட்டு லேப்ரோஸ்கோபிக் என்ற நவீன கருவிகள் மூலம் கொழுப்புகளை அதாவது அதிகமாக உள்ள கொழுப்புகளை நீக்குவது ஆகும்.
ஒரே சமயத்தில் உடலில் உள்ள எல்லா இடத்திலிருந்தும் கொழுப்புகள் அகற்றப்படுவதில்லை. அகற்றப்படவும் கூடாது. ஒருமுறை இடுப்பில் தங்கிய கொழுப்பை அகற்றிவிட்டால், அடுத்த முறை தொடை, அதற்கடுத்த முறை அடிவயிறு என பகுதிபகுதியாகத்தான் கொழுப்புகளை நீக்க இயலும்.
அதேபோல் ஒரிடத்திலிருந்து ஒருமுறை கொழுப்புகள் அகற்றப்பட்டால் மீண்டும் அவ்விடத்தில் அவை சேராது. இதற்காக அறுவை சிகிச்சைக்கு பிறகு விசேட உடையும் சில பயிற்சிகளும் பரிந்துரை செய்யப்படுகிறது.
அதனுடன் உணவு உட்கொள்ளும் விடயத்திலும் சில கட்டுப்பாடுளும் தேவை.
நடிகை நயன்தாரா
சினிமா உலகில் அறிமுகமானபோது நடிகை நயன்தாரா கொஞ்சம் உடல் எடை அதிகரித்து இருந்தார். தற்போது சிக்கென்று ஸ்லிமாக இருப்பதற்கு அவர் மேற்கொண்ட லிபோஷன் சிகிச்சை தான் காரணம்.
அதே போன்று நடிகை ஆர்த்தி அகர்வால், மேற்கொண்ட கொழுப்பு அறுவை சிகிச்சையால் தான் அவரது உயிர் பிரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.