2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் நாள் வாசிப்பு நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது நாடாளுமன்ற வளாகத்திற்குள் கீரி ஒன்று நுழைந்தமையினால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர் நாடாளுமன்ற ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய முயற்சியால் கீரி அங்கிருந்து விரட்டப்பட்டது.
தியவன்ன ஓயா காட்டுப் பிரதேசத்தில் இருந்து கீரி வந்திருக்க கூடும் என ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கீரி வெளியேற்றப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.