ஐ.பி.எல். தொடரில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரான ரிக்கி பொண்டிங்கிற்கு பதிலாகவே மஹேல நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது இந்த பதவியில் இருந்து ரிக்கி பொண்டிங் நீக்கப்பட்டுள்ளார். எனவே அவருக்குப் பதிலாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி ஐ.பி.எல். போட்டிகளில் 2 முறை கிண்ணத்தை வெற்றி பெற்றுள்ளது.
மேலும் ரோஹித் ஷர்மா, ஹர்பஜன் சிங்க், மலிங்க, பொல்லார்ட் போன்ற முன்னணி வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.