அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா!
ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா!
இருமுடிப் பிரியனே சரணம் ஐயப்பா!
ஈசன் திருமகனே சரணம் ஐயப்பா!
உய்வதற்கொரு வழியே சரணம் ஐயப்பா!
ஊழ்வினை அறுப்பவனே சரணம் ஐயப்பா!
எங்கும் நிறைந்தவனே சரணம் ஐயப்பா!
ஏழுலகாள்பவனே சரணம் ஐயப்பா!
ஐயம் நீக்கிடுவாய் சரணம் ஐயப்பா!
ஒன்றாய் நின்றவனே சரணம் ஐயப்பா!
ஓங்காரப் பொருளே சரணம் ஐயப்பா!
ஒளவியம் தனைத் தீர்ப்பாய் சரணம் ஐயப்பா!
அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் என்னைப் போன்ற தமிழ் வலைப்பதிவாளர்கள் எத்தனையோ குற்றங்களைச் செய்து கொண்டிருக்கிறோம். ஒன்றைச் சொல்ல விரும்பி வேறொன்றைச் சொல்கிறோம். உன் கருணையைப் பற்றியே ஐயம் கொள்கிறோம். உன் பாரபட்சம் இல்லாத தன்மையைத் தவறாகப் புரிந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கிறோம்.
எத்தனையோ விதங்களில் உன்னை இழித்தும் பழித்தும் பேசுகிறோம். இப்படி நாங்கள் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் மன்னித்துக் காத்து ரக்ஷிக்க வேணும் அருள் தரும் பொன்னு பதினெட்டாம்படி ஐயன் ஐயப்பசாமியே சரணம் ஐயப்பா.