ஹன்சிகா தற்போது ஜெயம் ரவியின் போகன் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
லக்ஷமன் இயக்க அரவிந்த் சாமியும் நடித்திருக்கும் இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் சில நாட்களாக நடிகை ஹன்சிகாவிற்கு திருமணம் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
இதுகுறித்து ஹன்சிகாவின் அம்மா மோனா மோத்வானி கூறுகையில், தற்போது தான் ஹன்சிகா தன்னுடைய 24வது வயதில் இருக்கிறார்.
மிகவும் சின்ன பெண், அவருக்கு திருமணம் என்று வந்த தகவல் முற்றிலும் வதந்தியே என்று கூறியுள்ளார்.