ஜி.வி.பிரகாஸ் ஐ பாராட்டிய விஜய்!

வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் நேற்று வெளியாகியிருக்கும் படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, நிக்கி கல்ராணி, பிரகாஷ் ராஜ், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் மேலும் மகிழ்ச்சி கொள்ளும் விதமாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய், ஜி.வி.பிரகாஷை போனில் அழைத்து ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் வெற்றியடைய தனது வாழ்த்துகளைத் தெரிவித்து இருக்கிறார்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் இளைய தளபதி வாழ்த்தால் தனது உற்சாகம் மேலும் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.’கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் விஜய் ரெபரென்சை ஜி.வி.பிரகாஷ் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.