யூரினரி இன்கான்டினென்ஸ் (Urinary Incontinence) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சிறுநீர் கழித்தலில் கட்டுப்பாடு கொள்ள முடியாத நிலை ஒருவர் தனக்கு சிறுநீர் வரும்போது அடக்கிக் கொள்ள முடியாமல் கசியவிட்டுவிடுவதைக் குறிக்கும்.
இப்பாதிப்பிற்குள்ளான ஒருவர் தான் விரும்பாத வேளையில் சிறுநீரை கழித்து விடுவார். அதாவது எதிர்பாராதவிதமாக சிறுநீர் கசிந்துவிடுவது.
இந்தக் குறைபாடு ஆண்களைக் காட்டிலும் பெண்களில் பொதுவாக அதிகமாக் காணப்படுகிறது. இந்த பாதிப்பு பொதுவாக இளம் பெண்களிலும் அறுபது வயதிற்கு மேற்பட்ட ஆண்களிடமும் காணப்படுகிறது.ஆண்களில் இந்த திடீர் சூழ்நிலை 60 முதல் 69 வயது வரை உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது.
ஆண்களில் இந்த திடீர் சூழ்நிலை 60 முதல் 69 வயது வரை உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது.
ஆனால் பெண்களுக்கு இதன் தீவிரம் நிலையாக இருக்கிறது.
கர்ப்பிணிப் பெண்கள், கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்த பெண்கள், அறுவை சிகிச்சைகள், குழந்தைப் பேறு அல்லது மாதவிடாய் நிறுத்தத்தின் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவை பெண்களில் இந்த சிறுநீர் கட்டுப்பாடு பிரச்னையை உருவாக்குகின்றன.
இந்தப் பிரச்சனை உடல் பருமனாலும் உருவாகலாம்.
அடிக்கடி இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள் போது இடத்தில் அவமானம் ஏற்படும் எனக் கருதி படபடப்புடன் அருகிலுள்ள ஏதாவது கழிப்பிடத்தை தேடி ஓடுவதுண்டு.
இதெற்கென பிரத்தியேக உடை அணிந்தாலும் ஒருவேளை துர்நாற்றம் வீசுமோ அல்லது உடைகளில் ஈரம் தெரிந்துவிடுமோ என பயந்து பொது நிகழ்ச்சிச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்க்கத் தொடங்குவார்கள்.
இந்த சிறுநீர் கட்டுப்பாட்டுப் பிரச்சனை கடும் பளுக்களை தூக்குதல், சிரித்தல், தும்முதல், இருமல் மற்றும் கடின உடற்பயிற்சி ஆகியவற்றாலும் ஏற்படக்கூடும். இதனால் ஒருவர் தன் சிறுநீர்ப் பையின் மீதான கட்டுப்பாட்டை இழந்து அவமானப்பட நேரிடும்.
இந்தக் குறைபாட்டை பெரும்பாலும் சரியான மருந்துகள் எடுப்பதன் மூலமும், இதனைக் கையாளும் பயிற்சிகள் மூலமும் மற்றும் நம்முடைய சொந்த முயற்சியினாலும் கூட கட்டுப்படுத்த இயலும்.
சிறுநீர்ப்பை மேலாண்மை திட்டமிடல் உங்களை குறிப்பிட்ட முறையிலும் நேரத்திலும் உங்கள் சிறுநீரை வெளியேற்ற உதவும்.
இதற்கென உள்ள பிரத்தியேக பயிற்சித் திட்டங்களில் உங்களுக்கு உகந்ததை நீங்களும் உங்கள் மருத்துவரும் இணைந்து தேர்வுசெய்யலாம்.
பரிந்துரைக்கப்பட்ட அளவு திரவங்களை எடுத்துக் கொண்டு ஐ சி பி எனப்படும் உபகரணங்களை பயன்படுத்தி உங்கள் சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியும்.
ஒவ்வொரு 3 அல்லது நான்கு மணி நேரங்களுக்கு ஒரு முறை நீங்கள் விழித்திருக்கும் நேரங்களில் உங்கள் சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீரை சுத்தமாக வெளியேற்றிவிட வேண்டும்.
இந்த குறைபாட்டை எதிர்கொள்ள சில இடுப்புப் பகுதி உடற்பயிற்சிகளும் உள்ளன. இதில் உங்களுக்கு உகந்ததை தேர்வு செய்து அதை செய்து பலன் பெறலாம். யோகாவை செய்வதாலும் சிறந்த பலன்களை பெறலாம்.