நிலவில் முகாம் ஒன்றை நிர்மாணிக்க தயாராகும் ரஷ்யா!

சந்திரனில் முகாம் ஒன்றை நிர்மாணித்து அதன் உரிமை உறுதிப்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

இதனடிப்படையில் சகல சந்தர்ப்பங்களிலும் 12 விண்வெளி வீரர்கள் தங்கியிருக்கும் வகையில் நிலவில் இந்த முகாமை நிர்மாணிக்க ரஷ்யா தீர்மானித்துள்ளது.

இந்த திட்டத்திற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் ஆய்வு நடவடிக்கைகளை மனிதர்கள் இல்லா விமானம் ஒன்றின் ஊடாக மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை அமெரிக்காவின் நாஸா நிறுவனமும் நிலவில் நிரந்த முகாம் ஒன்றை நிர்மாணிக்கும் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

இன்னும் 5 வருடங்களில் அந்த இலக்கை வெற்றி கொள்ள முடியும் என நாஸா அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும் ரஷ்யா நிலவில் மனிதர் வாழும் முகாம் ஒன்றை நிர்மாணிக்க 2031 ஆம் ஆண்டு வரையான காலம் எடுக்கும் எனக் கூறப்படுகிறது.

ரஷ்யா நிலவை வெல்ல முயற்சித்து வந்தாலும் முதலில் அமெரிக்காவே நிலவை அடைந்தது.

ரஷ்யா முதலில் விண்வெளியை வென்றது. இரண்டு நாடுகளுக்கும் இடையில் விண்வெளியை வெல்லவதில் கடும் போட்டி நிலவி வருகிறது.

இது பூமியில் தமது ஆதிபத்தியத்தை உறுதிப்படுத்த நடக்கும் போராட்டத்தை விட பெரிய போராட்டம் இருக்கும் என தெரியவருகிறது.

இந்த நிலையில், நிலவில் முகாம் நிர்மாணிக்கும் நடவடிக்கையை இணைந்து மேற்கொள்ள ரஷ்யா, அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக பேசப்படுகிறது.