அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தலைமைத்துவத்தின் கீழ்அமெரிக்காவிற்கும் ரஸ்யாவுவிற்கும் இடையில் ஒரு நெருக்கமான உறவு பேணப்பட்டால்உலகின் பெரும்பாலான பிரச்சினைகள் தீர்த்து வைக்க வழிகோலும் என முன்னாள்ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில நேற்றைய தினம் இடம் பெற்ற தனது 71வது பிறந்தநாள் நிகழ்வில்கலந்து கொண்டு உரையாற்றிய போதே மகிந்த மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ட்ரம்பிற்கும் ரஸ்யாவிற்கும் இடையில் நெருக்கமான உறவு பேணப்பட்டால் அனைத்துபிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு வழிவகுக்கும் என தான் நம்புவதாக முன்னாள்ஜனாதிபதி கூறியுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியானால் இலங்கைக்கு ஏற்படக் கூடிய தாக்கம்தொடர்பிலும் மகிந்த இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மீதான அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி தலைமையின் கீழான தலையீட்டைகுறைக்க வேண்டும் என தான் நம்புவதாக மகிந்த தெரிவித்துள்ளார்.