எலுமிச்சை பழமானது, நமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் நம் வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவதற்கும் பலவகையான நன்மைகளைத் தருகிறது.
எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி வீட்டில் வைப்பதால், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன், ஒருசில உடல்நல குறைபாடுகள் வராமலும் தடுக்கிறது.
வீட்டில் எலுமிச்சை பழத்தினை நறுக்கி வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்
நோய்த் தொற்றுகளினால் பாதிக்கப்பட்டவர்கள், உறங்கும் அறையில் எலுமிச்சை பழத்தை அறுத்து வைப்பதால், அந்த நோய் தொற்றுகள் மேலும் அதிகரிக்காமல் பாதுகாக்க வைக்கிறது.
எலுமிச்சை பழத்தை நாம் உறங்கும் அறையில் அறுத்து வைப்பதால், அதன் நறுமணம் அரை முழுவதும் பரவுகிறது. இதனால் இந்த நறுமணத்தை சுவாசித்து கொண்டு உறங்குவதால் நுரையீரலின் செயல்திறன் மற்றும் மூச்சு தொடர்பாக ஏற்படும் பல பிரச்சனைகளை குறைக்கிறது.
நம் வீட்டு அறைகளில் எலுமிச்சை பழத்தினை அறுத்து வைப்பதினால், அதன் மூலம் ஏற்படும் நறுமணம் நமது வீட்டில் ஏற்படும் துர்நாற்றத்தை தடுக்கிறது.
எலுமிச்சை பழத்தின் நீரை பருகுகினால், நமது ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, உடல் நலனை மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
நம் உடம்பில் உள்ள வயதாகும் செல்களின் தாக்கத்தை கட்டுப்படுத்தி, சரும நலத்தையும் மேம்படுத்துகிறது.
எலுமிச்சை தோலை வைத்து முழங்கை, முழங்கால் பகுதிகளில் தேய்த்துக் குளிப்பதால், முழுமையாக சுத்தத்தை தருகிறது. மேலும், கருவளையம், பருக்கள் போன்ற பிரச்சனைகளுக்கு எலுமிச்சை பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.