மறைக்கப்படும் பகுதி என்றாலும் கவனம் தேவை!

தனது உடலுக்கு பொருத்தமான அழகான மார்பகங்களையே பெண்கள் அனைவரும் விரும்புவார்கள்.

ஏனெனில் பெண்களின் மார்பகங்கள் அவர்களின் உடலுக்கு ஏற்றது போல பொருத்தமாக இருந்தால் தான் அவர்கள் விரும்பும் ஆடைகளை அணிந்துக் கொள்ள முடியும்.

பொதுவாக உலகில் மார்பகங்களை சீரமைத்துக் கொள்ளும் பெண்களின் எண்ணிக்கையும், மார்பகத்தின் அளவை அதிகரித்துக் கொள்ளும் பெண்களின் எண்ணிக்கையும் உயர்ந்துக் கொண்டே இருக்கிறது.

பெண்களின் மார்பகங்கள் அவர்களின் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதன் நோக்கமாக உருவானது. எனவே குழந்தைகளுக்கு பால் கொடுப்பதால் பெண்களின் மார்பகங்கள் தளர்வாகின்றது என்பது முற்றிலும் தவறான கருத்து.

மார்பகங்கள் பற்றி பெண்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை
  • உடல் பருமன் அதிகம் கொண்ட பெண்களின் மார்பகங்கள், அவர்களின் கொழுப்பின் அளவு அதிகரிப்பதால், மார்பகத்தின் அளவையும் அதிகரிக்கச் செய்கிறது. இதனால் பெண்களுக்கு ஆரோக்கியம் குறைந்து தோள்வலி, முதுகுவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
  • பெண்களின் மார்பகங்கள் லிம்ப்நோடுகள், பால் உற்பத்தி சுரப்பிகள், கொழுப்புகள் போன்றவற்றால் ஆனது. மேலும் 75% சதவீதம் நிறைந்த கொழுப்புகள் பெண்களின் மார்பகங்களுக்கு வடிவம், அளவு, பொலிவு ஆகியவற்றைத் தருகின்றது.
  • பெண்கள் பருவம் அடைந்த பின்பு அவர்களின் மார்பகங்கள் வடிவம் பெற்று, கவர்ச்சியான தோற்றத்திற்கு மாறுகிறது. மார்பு காம்பு வளரத் தொடங்குவது முதல் மார்பகங்கள் முழுமை பெறுவது வரை, மார்பகத்தின் வளர்ச்சி நடைபெறுகிறது.
  • பெண்களின் சிறு வயதில் அவர்கள் வளரும் பருவத்தில் சமச்சீரான சத்துணவுகளை மட்டுமே கொடுக்க வேண்டும். இதனால் அவர்களின் உடல் மற்றும் மார்பக வளர்ச்சிகள் சீராக இருக்கும்.
  • பெண்கள் பருவ வளர்ச்சிக்குப் பின் அவர்கள் கர்ப்பமாகும் போது மார்பகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிகள் உருவாகும். பெண்களின் மார்பக மாற்றங்கள் 40 வயதை கடந்ததும் ஹார்மோன்கள் மற்றும் கிளான்டுலர்திசுக்கள் குறைவதால், மார்பகங்கள் சுருங்கத் தொடங்கும்.
பெண்களின் மார்பகங்களை சீராக பராமரிக்க செய்ய வேண்டியவை
  • பொதுவாக பெண்களின் மார்பகத்தில் 75 சதவீதம் கொழுப்பு நிறைந்து உள்ளது. எனவே கொழுப்பு கலந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
  • பெண்களின் சீரான மார்பக வளர்ச்சிக்கு, ஈஸ்ட்ரோஜன் நிறைந்த உணவுகள், முட்டையின் மஞ்சள் கரு, சூரியகாந்தி விதை, சோயா, தவிடு நீக்காத தானியங்கள், வெந்தயம், கறுப்பு எள், கிராம்பு, வெள்ளை கடலை, கோழி இறைச்சி, சிறிய வகை மீன்கள், கீரை வகைகள் போன்ற உணவுகள் பெண்களின் மார்பக வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
  • பெண்கள் அவர்களின் சீரான மார்பக வளர்ச்சியை பெறுவதற்கு, தினமும் காலையில் எழுந்து மார்பகத்திற்கான ஒருசில உடற்பயிற்சிகள் செய்து வந்தால், நல்ல அழகான மார்பகத்தை பெறலாம்.