கால்வாயில் சுற்றித் திரிந்த டால்பின்! ஆச்சரியத்தில் மூழ்கிய மக்கள்

கேரளாவில் கால்வாய் ஒன்றில் கடலில் வாழும் டால்பின் சுற்றித் திரிந்தது அப்பகுதி மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

கொச்சின் Nayaraambalam மற்றும் Punchapalam பகுதிக்கு இடையில் உள்ள கால்வாய் பகுதியில் கூன்முதுகு டால்பின் (humpback dolphin) ஒன்று மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளது.

கடலுக்கும் கால்வாய்க்கும் இடையில் எந்தவித தொடர்பு இல்லாத நிலையில் டால்பின் எப்படி இங்கு வந்தது என்று அப்பகுதி மக்கள் ஆச்சரியமடைந்தனர்.

மேலும், பலரும் இந்த டால்பினை வியப்புடன் வந்து பார்த்து சென்றனர். அது கால்வாயில் 15 கி.மீ தூரம் சுற்றித் திரிந்துள்ளது.

இந்நிலையில் அப்பகுதி மீனவர்கள் கால்வாயில் இருந்து டால்பினை பத்திரமாக மீட்டு அருகில் உள்ள கடலில் விட்டுள்ளனர்.