அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவின் உறவினர் ஒருவரின் மரண வீட்டில் பங்கேற்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்றிருந்தார்.
இதன்போது வருகை தந்த மஹிந்தவுக்கு தேனீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. திசாநாயக்கவின் வீட்டின் ஊழியர் தயாரித்திருந்த தேனீர் மஹிந்தவுக்கு வழங்கப்படுவதனை அவரது பாதுகாவலர்கள் தடுத்துள்ளனர்.
புதிதாக தேனீர் தயாரிப்பதற்கான அனைத்து பொருட்களையும் கொண்டு வந்து தங்கள் முன்னால் தேனீர் தயாரித்து கொடுக்குமாறு பாதுகாவலர்களினால், ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து உடனடியாக தேனீருக்கான பொருட்கள் வாங்கப்பட்டு, பாதுகாவலர்கள் முன்னிலையில் தேனீர் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்போது மஹிந்தவின் பாதுகாவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
திசாநாயக்க வீட்டில் வழங்கப்படும் சாதாரண நீர் உட்பட அனைத்தையும் நன்கு சோதிக்குமாறு மஹிந்தவினால் முன்னரே அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டதாக பாதுகாவலர்கள் தெரிவித்துள்ளனர்.