பத்து மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை!

நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பத்து மாவட்டங்களில் மண்சரிவு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் ஆர்.என்.எஸ்.பண்டார தெரிவித்துள்ளார்.

நுவரெலியா, பதுளை, மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை காலி, மாத்தறை, கேகாலை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இந்த மண்சரிவு ஆபத்துக் காணப்படுகின்றது.

இன்றைய தினமும் இந்த மாவட்டங்களில் கடும் மழை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பிரதேச மக்களுக்கு விளக்கமளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதேச அலுவலகங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது தென்கிழக்கு கடற்பிரதேசங்களில் நிலவும் சீரற்ற நிலை எதிர்வரும் தினங்களில் குறைவடையும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடைப் பருவப்பெயர்ச்சி மழை அதிகரிப்பதன் மூலம் ஏற்படக்கூடிய மின்னல் ஆபத்துக்களை தவிர்த்துக்கொள்வதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.