பசில் மீது கடும் கோபத்தில் மஹிந்த!

முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் தலைமைத்துவத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கட்சியின் தலைவர் பசில் அல்லவென, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஊடகங்களிடம் கடுமையாக தெரிவித்துள்ளார்.

புதிய கட்சியின் தலைவர் யார் என ஊடகவியலாளர்கள் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு அந்த கட்சியில் அழைப்பு விடுக்கப்படவில்லை. தான் அந்த கட்சியில் இணைவதா இல்லையா என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

பசில் ராஜபக்ச குறித்து ஊடகவியலாளர்கள் மஹிந்தவிடம் வினவிய போது அதற்கு கடுமையாக மஹிந்த பதில் கூறியதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

புதிய கட்சி செயற்பட ஆரம்பித்ததனை தொடர்ந்து மஹிந்த தரப்பு உறுப்பினர்களுக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக கடந்த நாட்களாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.