ஆசிரியர்களுக்கு அடுத்த வருடம் தொடக்கம் இதற்கு தடை!! கல்வி அமைச்சர் அதிரடி.

அடுத்த வருடம் தொடக்கம் ஆசிரியர்களுக்கு, பாடசாலை மாணவர்களினால் பெற்றுக் கொடுக்கப்படும் பரிசுகளை தடை செய்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.

கிரியுள்ள நக்காவத்த பாடசாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுற்றறிக்கையில் தான் கையெழுத்திட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.