பாலிவுட் உலகில் தனது அசாத்திய நடிப்பால் கொடிகட்டி பறக்கும் நடிகை ப்ரியங்கா சோப்ராவின் பட வெளியீட்டு விழாவில் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய சினிமாவில் முதல் முறையாக ஒரு பஞ்சாபி திரைப்படம் ஹாலிவுட் உலகில் திரையிடப்படுகிறது.
Sarvann என்ற இந்த பஞ்சாபி திரைப்படத்தை நடிகை ப்ரியங்கா சோப்ரா தயாரித்துள்ளார். இத்திரைப்படம் கனடாவின் டொராண்டாவில் வாழும் அந்நாட்டு குடிமகன் அல்லாத ஒரு இந்தியனின் கதை ஆகும்.
இத்திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் போஸ்டர் வெளியீட்டு விழா டொரண்டோவில் நடைபெறவிருக்கிறது. இதில் முக்கியமான தகவல் என்னவென்றால், இதனை வெளியிடப்போவது கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆவார்.
ஜஸ்டின் ட்ரூடோ ஒரு பிரதமர் மட்டுமல்ல சமூகவலைதளங்களின் ஹீரோவும் கூட. பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்துகொள்ளும் இவர், தற்போது இந்த நிகழ்விலும் கலந்துகொண்டு சிறப்பிக்கவிருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.