தொழிற்துறையில் சிம்ம சொப்பனமாய் திகழும் 5 ஜோடிகள்

தொழிற்துறையில் சாதனை படைப்பது என்பது அரிதான ஒன்று. அத்துறையில் காலடி எடுத்து வைத்தால் மட்டும் போதாது, பல்வேறு வீழ்ச்சிகளை சந்தித்தாலும், அவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கி சாதனை படைத்து சிம்ம சொப்பனமாக திகழ வேண்டும்.

அந்த வகையில் பொருளாதார துறையில் சாதனை படைத்து, அசைக்க முடியாத ஜாம்பவான்களாக திகழும் உலகின் தலைசிறந்த 5 தம்பதியர் பற்றி பார்ப்போம்.

பில் கேட்ஸ் -மெலிண்டா கேட்ஸ்

தொழில்நுட்ப துறையில் அசைக்க முடியாத சக்தி இவர். அமெரிக்காவின் அதிக பணக்காரரான பில் கேட்ஸ், 79.9 பில்லியன் டொலர் மதிப்புள்ள மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் உரிமையாளர்.

அமெரிக்க தொழிலதிபர் மற்றும் சமூக சேவகர் மெலிண்டா கேட்சை பில் மணந்துகொண்டார். அவருடைய சொத்து மதிப்பு சுமார் 70 பில்லியன் டொலர்கர் ஆகும்.

இருவரும் இணைந்து, ‘பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன்’ எனும் உலகின் பெரிய தனியார் அமைப்பை நடத்துகின்றனர். மெலிண்டா 90’களில் மைக்ரோசொப்டில் இணைந்தபோது பில் அவரை சந்தித்தார்.

2018 ஆம் ஆண்டிற்குள் போலியோவை முற்றிலும் ஒழிக்கவும், பெண்களுக்கான புதியமுறை குடும்பக்கட்டுபாடு முறையை 2020க்குள் அறிமுகப்படுத்துவதை தங்களின் இலக்காக கொண்டு செயல்பட்டுவருகிறது இந்த ஜோடி.625-0-560-350-160-300-053-800-668-160-90-6
முகேஷ்-நீதா அம்பானி

இந்திய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிட்டெடின் இயக்குனர்.

இவர் மனைவி நீதா அம்பானி, தற்போது ரிலையன்ஸ் பவுண்டேஷனின் நிறுவனர் மற்றும் இயக்குனர். இந்த கோட்டீஸ்வர தம்பதிகள் தங்களது தொழிலின் லாபத்தின் பெரும்பகுதியை ஏழைகளுக்கு செலவழித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

‘ப்ராஜக்ட் த்ருஷ்டி’ எனும் கண் பார்வையற்றோருக்காக செயல்படும் ரிலையன்ஸின் சமூக திட்டத்தில் நீதா தன் பங்கை பெரிதாக ஆற்றி வருகிறார்.
625-0-560-350-160-300-053-800-668-160-90-8
மரிசா மேயர்-ஜாக் போக்

மரிசா யாஹூ’வின் தலைமை செயல் அதிகாரி மற்றும் ஜாக் முன்னாள் வழக்கறிஞர் ஆவார். இவர் பிக் டேட்டா தொடக்க நிறுவனங்களில் முதலீடும் செய்து வருகிறார்.

மரிசா கூகிளில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது ஜாக் அவரை சந்தித்தார். யாஹூவில் இணைந்த மரிசா தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார்.
625-0-560-350-160-300-053-800-668-160-90-9
ஜெஃப் பெசோஸ் – மெக்கென்சி பெசோஸ்

அமேசானின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஆவார். மெக்கென்சி பெசோஸ் ஒரு கதையாசிரியர். பெசோஸ், தனது பிரபல புத்தகங்களான ‘The Testing of Luther Albright’ (2005) மற்றும் Traps (2013) வெளியிட்டார்.

மெக்கன்சி, பைஸ்டாண்டர் ரிவல்யூஷன் எனும் ‘கேலி செய்தலுக்கு எதிரான’ ஒரு அமைப்பை 2014 இல் தொடங்கினார்.
625-0-560-350-160-300-053-800-668-160-90-10மார்க் ஜுக்கர்பெர்க்- பிரிஸ்சில்லா சான்

சமூக வலைதளங்களில் முன்னணி தளமாக இருக்கும் பேஸ்புக்கின் நிறுவர் மார்க் ஆவார்.

இவரும், இவரது மனைவியும் சேர்ந்து அடுத்த பத்து ஆண்டுகளில், அனைத்து வகை வியாதிகளைத் தடுக்கும் ஆய்வுகளுக்கு 300 கோடி டொலர் உதவி அளித்துள்ளனர்.

இந்த நிதியளிப்பும் தொடர் முயற்சிகளும் Chan Zuckerberg என்ற அமைப்பின் கீழ் நிர்வகிக்கப்படும். இந்த அமைப்பினை உருவாக்கி, அதனைச் செயல்படுத்த சென்ற ஆண்டில், மார்க் நிதி வழங்குவதாக உறுதி அளித்தார்.

இங்கு மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், “சான் ஸக்கர்பெர்க் அறிவியல் (Chan Zuckerberg Science)” என அழைக்கப்படும். உலகளாவிய அளவில் இதன் செயல்பாடுகள் இருந்தாலும், சான்பிரான்சிஸ்கோ நகரில் இதன் செயல்பாடுகளின் கட்டமைப்பு இயங்கும். இங்கு இயங்கும் கலிபோர்னியா பல்கலை, கலிபோர்னியா பெர்க்லீ பல்கலை மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலை ஆகியவற்றுடன் இணைந்து ஓர் உயிரியியல் ஆய்வு மையம் உருவாக்கப்பட்டு, அதன் வழியே இந்த அறிவியல் ஆய்வு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார்.625-0-560-350-160-300-053-800-668-160-90-11