நள்ளிரவிலும் சோகத்துடன் விரைந்த அமைச்சர்!

தெஹிவளை பெஷன் பக் நிறுவன காட்சியறை தீக்கிரையாகிக் கொண்டிருக்கும் தகவல் அறிந்தவுடன் தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் ஸ்தலத்துக்கு விரைந்துள்ளார்.

அங்கு சென்ற அமைச்சர் தீயணைப்புப் படை மற்றும் பொலிசாருடன் உரையாடி, தீயை அணைப்பதிலும், பிரதேசத்தில் பதற்றம் ஏற்படுவதைத் தணிக்கும் வகையிலும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்.

இது குறித்து நேற்று நள்ளிரவு தொடக்கம் வலைத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் அமைச்சர் மனோ கணேசனுக்குப் பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கின்றது.

இதற்கிடையே கொழும்பின் பிரபல முஸ்லிம் அரசியல்வாதியொருவர் சம்பவ இடத்துக்கு வருகை தந்திருந்த போதிலும் ஆனந்தச் சிரிப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தமையும் சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனத்தைச் சம்பாதித்துள்ளது.

சிங்கள இனவாதக் குழுக்களுக்கு முஸ்லிம்கள் தொடர்பில் சில முஸ்லிம் அரசியல்வாதிகளே உள்வீட்டுத் தகவல்களை வழங்கி, தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக இனமுரண்பாடுகளுக்குத் துணை நிற்பதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் பெஷன் பக் நிறுவனம் தீக்கிரையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.mano-1