ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போதுவரை இந்த டீசரை 6.9 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.
இதைதொடர்ந்து படம் வரும் டிசம்பர் 16-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் வரும் 27-ம் தேதியன்று வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்துக்கு சூர்யாவின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.