அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் மனைவி மெலானியா (45). இவர் முன்னாள் மாடல் அழகி ஆவார்.
இவர் மிச்செலி ஒபாமாவுக்கு அடுத்தப்படியாக அமெரிக்காவின் முதல் பெண்மணி ஆக இருக்கிறார். பொதுவாக அமெரிக்க அதிபரின் மனைவிக்கு அந்நாட்டு ஆடை வடிவமைப்பாளர் புதுவிதமான நாகரீக உடைகளை வடிவமைத்து தந்து பேறும் புகழும் பெருவார்கள்.
அந்த வகையில் தற்போதைய முதல் பெண்மணி மிச்செலி ஒபாமா, முன்னாள் அதிபரின் மனைவியும் முன்னாள் வெளியுறவு துறை மந்திரியுமான ஹிலாரி கிளிண்டனுக்கு அமெரிக்காவின் முன்னணி ஆடை வடிவமைப்பாளருமான ஷோபி தெலாட் (52) தயாரித்து வழங்கியுள்ளார். இவர் பிரான்சை சேர்ந்தவர். இவர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மனைவி மெலானியாவுக்கு ஆடை வடிவமைத்து தயாரித்து தரமறுத்துள்ளார். தனது முடிவையே மற்ற நிபுணர்களும் பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒருவருக்கு ஆடை தயாரித்து கொடுப்பது அவரது தனிப்பட்ட உரிமை மற்றும் சுதந்திரம் ஆகும். என்னை பொறுத்தவரை நான் டிரம்ப் மனைவி மெலானியாவுக்கு ஆடை தயாரித்து வழங்கமாட்டேன்.
ஏனெனில் தேர்தல் பிரசாரத்தின் போது அவரது கணவர் டிரம்ப் இனவெறி, செக்ஸ் பிரச்சினை, வெளிநாட்டினர் மீதான எதிர்ப்பு கொள்கைகளை கொண்டிருந்தார். என்னை பொறுத்தவரை எனக்கு பணம் முக்கியமல்ல என ஒரு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இது பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது.