ஷவரில் குளிப்பவரா நீங்கள்? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்!

ஷவரில் குளிப்பதால் நேரம் குறைவு என்பதை விட கையினால் நீரை எடுத்து குளிப்பதில் சோம்பேறித்தனம் வருவது உண்மை.

ஷவரில் குளிப்பதால் நமக்கு புத்துணர்வு வருவது போலிருந்தாலும் அதனால் சரும மற்றும் கூந்தல் பிரச்சனைகளும் உண்டாகிறது என்பது உண்மை.

அதிக சரும வறட்சி உண்டாகும். சுருக்கங்கள், மற்றும் கூந்தலின் வேர்க்கால்கள் உடைந்து போகும் . இந்த பிரச்சனைகளை வராமல் தடுக்க வழிகள் என்ன?

இப்போது பார்க்கலாம்.

சூடான குளியல் :

நமது உடலுக்கு தேவையான சரியான சூட்டில் வைக்க முடியாது. அதிலேயே சூட்டை அட்ஜஸ்ட் பண்ணும் வசதி இருந்தாலும் உண்மையில் அது தரும் சூட்டிற்கு நாம்தான் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்கிறோம்.
அந்த சூட்டில் குளிக்கும்போது கூந்தல் அதிகமாக உடையும்.
இதனால் முடிஉதிர்தல் அதிக வறட்சி அதனால் பொடுகு என பல தொல்லைகள் ஆரம்பிக்கும். இதமான சூட்டில் ஷவ்ரில் குளிப்பது நல்லது.
குளிப்பதற்கு முன் சீவுதல் :

ஷவரில் குளிப்பதற்கு முன் தலை முடியை சீவிக் கொள்வது நல்லது. ஏனென்றால் தலை சீவும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் ஷவரில் குளிக்கையில் முடி பலவீனமடைவது தடுக்கலாம்.

இறுதியாக பச்சை தண்ணீர் :

ஷவரில் குளித்த பின் பச்சை தண்ணியில் இறுதியாக கூந்தலை அலாசும்போது கூந்தலின் வேர்க்கால்கள் பாதிக்கப்படமல் உதிராமல் தடுக்கப்படும்.

உடலிற்கு அதிக வறட்சி :

உடலில் சூடு படும்போது சருமம் சுருங்கி வற்ட்சி உண்டாகும். சுருக்கங்களும் ஏற்படும். ஷவரில் குளிப்பதால் சருமம் பாதிக்கப்படும் என சரும வல்லு நர்கள் கூறுகின்றனர்.

ஷவர் எண்ணெய் :

ஷவரில் குளித்த பின் மறக்காமல் உடலில் எண்ணெய் தடவுவது அவசியம். இவை வறட்சியை போக்கும்.

ஜெல் மற்றும் க்ரீம் தடவுவதை விட எண்ணெய் சிறந்ததுதான் நல்லது.

ஏனென்றால் க்ரீம் ஜெல் ஆகியவை இன்னும் அதிக வறட்சியை உண்டாக்கும்.