யூடியூப் வீடியோக்களை சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே பஃபர் ஆக ஆரம்பித்துவிடும்.
இதற்கான தீர்வை தான் இங்கு வழங்கியுள்ளோம்.
முதலில், க்ரோம் அல்லது மொஸில்லா ஃபயர்ஃபாக்ஸ் பிரவுஸர்களில் SmartVideo எனும் எக்ஸ்டென்ஷனினை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
பின்பு, இதில் விருப்பமான வீடியோவினை ப்லே செய்து மவுஸ் பாயிண்டை வீடியோக்கள் பக்கம் கொண்டு செல்லவும்.
இங்கு, சிறிய பாக்ஸ் தெரியும், அதில், Global Preferences எனும் ஆப்ஷனினை கிளிக் செய்ததை தொடர்ந்து Smart Buffer Box ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
Smart Buffer Box தேர்வு செய்ததும் பஃபர் செய்ய வேண்டிய வீடியோவினை தேர்வு செய்யக் கோரும் ஆப்ஷன் தெரியும்.
அப்புறம் என்ன இனி கவலையில்லாமல் வீடியோக்களை பார்த்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது தான்.
ஆனால், இந்த அம்சங்கள் அனைத்தும் கணனிகளில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்படவில்லை.