கொலவெறி பாடல் மூலம் உலகப்புகழ் பெற்றவர் அனிருத். கல்லூரியில் இருக்கும் போதே இசையமைக்க தொடங்கி தற்போது விஜய் அஜித் போன்ற மாஸ் ஹீரோக்களுக்கு இசையமைக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார்.
இந்நிலையில் அவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்து பெண் பார்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்களாம் அவர் பெற்றோர்.
26 வயதாகும் அனிருத், தனக்கு தகுந்த பெண்ணை தேர்வு செய்யும் உரிமையை தன் பெற்றோரிடமே விட்டுவிட்டாராம். இந்த செய்தியால் அனிருத்தின் பெண் ரசிகைகள் அதிர்ச்சியாகியுள்ளார்களாம்.
கைவசம் பல படங்களை வைத்துள்ள அனிருத் தற்போது தல57 படத்தின் பாடல்களை கம்போஸ் செய்து வருகிறார்.