வெடிகுண்டு வைத்து சொந்த குடும்பத்தையே படுகொலை செய்த ஐ.எஸ் பயங்கரவாதி: நடந்தது என்ன?

ஈராக்கின் மொசூல் நகரில் ஐ.எஸ் ஆதரவு இளைஞன் ஒருவன் வைத்திருந்த தற்கொலை பெல்ட் வெடிகுண்டு தவறுதலாக வெடித்து சிதறியதில் அவரது குடும்பமே உடல் சிதறி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.எஸ் பயங்கரவாதிகள் சிறுவர்களை பயன்படுத்தி அவர்களுக்கென தனியாக ஒரு படையை உருவாக்கி பயிற்சி அளித்து வருகின்றனர்.

குறித்த படையில் இளம்வயது சிறுவர்கள் மட்டுமே போராளிகளாக இணைக்கப்பட்டு அவர்களுக்கு தூப்பாக்கி பயிற்சி, வெடிகுண்டு வெடிக்க வைக்கும் பயிற்சி மற்றும் தற்கொலைப் படையாக மாறுதல் உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.

தற்போது ஐ.எஸ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள மொசூல் நகரம் ரஷ்ய கூட்டுப்படை மற்றும் ஈராக் ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்த பயங்கரவாதிகள் குறித்த நகரைவிட்டு நகரத் துவங்கியுள்ளனர்.

மட்டுமின்றி மறைவிடங்களில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகள் தங்களுடன் தற்கொலை வெடிகுண்டை எந்த நேரமும் கூடவே வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் Cubs of the Caliphate எனும் சிறுவர்களுக்கான படையில் உறுப்பினராக உள்ள சிறுவன் ஒருவரது தற்கொலை வெடிகுண்டு எதிர்பாராதவகையில் வெடித்துச் சிதறியுள்ளது.

இதில் அவருடன் இருந்த தாய் தந்தை சகோதரர்கள் உள்ளிட்ட 6 பேர் சம்பவயிடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக இறந்துள்ளனர். ராணுவ நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாக இருப்பதால் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தங்களுடனே தற்கொலை வெடிகுண்டையும் சுமந்து திரிகின்றனர்.

இந்த மாத துவக்கத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் தலைவராக இருக்கும் அல் பாக்தாதி மற்றும் அவரது முக்கிய கூட்டாளிகள் சிலர் உணவருந்தும் வேளையில், இதேப் போன்று ஒரு பயங்கரவாதியின் தற்கொலை வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் 16 பேர் உடல் சிதறி பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.625-0-560-320-500-400-194-800-668-160-90-2 625-0-560-320-500-400-194-800-668-160-90-3