பொதுவாக ஒரு சிலருக்கு அறியாத பல வகைகளில் சப்போட்டா பழமும் ஒன்று. அதைப் பற்றி கேட்டால் எப்படி இருக்கும் என்று நம்மிடம் கேள்வி கேட்பார்கள். அதில் இருக்கும் நன்மைகள் தெரிந்தால், சப்போட்டாவை நீங்கள் விடவே மாட்டீர்கள்
சப்போட்டா பழத்தின் பயன்களை பார்ப்போம்
- 100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மில்லி கிராம் கால்சியமும், 27 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது. எனவே தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் வளர்ச்சி அதிகரிக்கும், எலும்புகள் வலுவடையும், சருமம் பளபளப்பாகும்.
- சப்போட்டா, ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, கொழுப்பை நீக்குகிறது. வாய்ப்புண், வயிற்றெரிச்சல், மூலநோய் மற்றும் மலச்சிக்கலுக்கும் தீர்வு தருகிறது, எலும்புகளை வலுவடையச் செய்கிறது.
- இரவில் உறக்கம் வராமல் அவதிப்படும் நிலைக்கு நல்ல மருந்தாகும், சப்போட்டா. இதை ‘ஜூஸ்’ ஆக தயாரித்து அருந்தலாம்.
- பழக்கூழ், ஜாம், மில்க் ஷேக் என்று சப்போட்டாவை விதவிதமாய் தயாரித்தும் சாப்பிடலாம்.
- இதயம் சம்பந்தமான கோளாறுகளில் இருந்து காக்கும் தன்மையும் சப்போட்டா பழத்துக்கு உண்டு என ஓர் ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
- சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்றுநோய் ஏற்படாது. சருமத்தை மிருதுவாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்துக்கு உண்டு.
- உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பைக் குறைத்துவிடும் அரிய தன்மையும் சப்போட்டாவுக்கு இருக்கிறது.
- சப்போட்டா பழ ஜூசுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் சளித்தொல்லை நீங்கும். இது பித்தத்தினால் ஏற்படும் வாந்தி மயக்கத்தை போக்குகிறது. சப்போட்டா பழத்துடன் உரு டீஸ்பூன் சீரகம் கலந்து சாப்பிட பித்தம் நீங்கும். 2 சப்போட்டா பழத்துடன், ஒன்றரை டீஸ்பூன் டீ தண்ணீரை கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கின் போது ரத்தம் கலந்து வெளியேறுவது குணமாகும்.
- சப்போட்டா உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைக்கும். சப்போட்டா பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், இரண்டு பழத்துடன், ஒரு டம்ளர் பால் சேர்த்து, மிக்ஸியில் அடித்து மில்க் ஷேக் செய்து சாப்பிடலாம்.