பெண்களுக்காக களத்தில் இறங்கிய பிரபல நடிகை…குவியும் வாழ்த்துகள்: அப்படி என்ன செய்தார்?

பிரபல நடிகையான ராகுல் ப்ரீத் சிங் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நிதி திரட்டியதால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.

ஹைதரபாத்தில் Fitness Unplugged என்ற பெயரில் உடல் நல ஆரோக்கியம் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியானது பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்திற்காக அளிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

இதனால் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பிரபல நடிகை ராகுல் ப்ரீத் சிங் கலந்து கொண்டார். அதன் பின் அவர் கூறுகையில், நான் இந்த நிகழ்ச்சியில் சில மணி நேரங்கள் மட்டுமே இருந்துள்ளேன்.

இதன் மூலம் கிடைக்கும் நிதி,பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எப்படி உதவப் போகிறது என்பது குறித்து எனக்கு சரியாக தெரியவில்லை.

ஆனால் உண்மையாக உதவி தேவைப்படும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஐந்து சிறுமிகளை தான் கண்டறிந்துள்ளதாகவும், அவர்களுக்கு இதன் மூலம் கிடைக்கும் நிதி கண்டிப்பாக கிடைக்கும் என கூறியுள்ளார்.

மேலும் அந்த ஐந்து சிறுமிகளை தான் தனித்தனியாக சந்தித்து அவர்களிட நிலைமையை கேட்டறிந்ததாகவும் கூறியுள்ளார். இவரின் இச்செயலைக் கண்டு பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.