வாழ்நாளை எண்ணிக்கொண்டிருக்கும் தந்தை: 10 மாத குழந்தையுடன் கொண்டாடிய முதல் கிறிஸ்துமஸ்

பிரித்தானியாவில் வாழ்க்கையின் இறுதிகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் தந்தை, தன் குழந்தை மற்றும் சான்றா தாத்தாவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் East Sussex நகரத்தை சேர்ந்தவர் Jay Clark(41). இவருக்கு Caroline என்ற மனைவி உள்ளார். Jay Clarkக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கணைய புற்று நோய் ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்வதற்கு பல்வேறு முயற்சிகள் செய்தும் பலன் அளிக்கவில்லை.

இதனால் மருத்துவர்கள் காப்பாற்றுவது மிகவும் கடினம் என கூறியுள்ளனர். இதற்கிடையில் இவர்களுக்கு Maxie என்ற குழந்தை பிறந்துள்ளது. இதனால் தாம் இறப்பது உறுதி என்ற நிலையில் Jay Clark தன் குழந்தையுடன் அதிக நேரம் செலவழித்து வருகிறார்.

இந்நிலையில் தனது பத்து மாத குழந்தையுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட முடிவு செய்துள்ளார். அதன் படியே வீட்டில் அலங்காரம் மற்றும் சான்றா தாத்தா என வெகு விமரிசையாக கொண்டாடியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், இன்று தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இது தொடர்பான புகைப்படங்களை என்றும் அழிக்கமுடியாது என்றும் அது நீங்கா நினைவில் தன் மகனுடன் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

இன்று நான் உயிரோடு இருக்கிறேன், இன்னும் சில தினங்கள் அல்லது சில மாதங்களில் இறந்து விடுவேன். இன்று எடுத்த புகைப்படத்தை தன் மகன் என்றாவது ஒரு நாள் பார்ப்பான் என்றும் அன்று தன் அப்பாவுடன் பயணித்த நினைவுகள் அவனுக்கு நினைவு வரும் என்று உணர்ச்சிப் பூர்வமாக கூறியுள்ளார்.625-0-560-320-500-400-194-800-668-160-90-1 625-0-560-320-500-400-194-800-668-160-90-4 625-0-560-320-500-400-194-800-668-160-90-5